நுண்ணுயிரினங்களின் எதிர்ப்பாற்றல்
  
Translated

நுண்ணுயிரினங்களின் எதிர்ப்பாற்றல் என்பது நுண்ணுயிரிகள், தீநுண்மங்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் எதிர்நுண்ணுயிரினங்களைத் தடுத்துப் போராடுதல் என்பதாகும்.

 

“பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரும்பான்மை கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தி அடைந்த நுண்ணுயிரிகளின் பெயர் பெருங்கிருமி (சூப்பர்பக்).”

 

“எதிர்நுண்ணுயிரினங்களின் எதிர்ப்பாற்றல் அதிகரித்து வரும் நுண்ணுயிரிகள், தீநுண்மங்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் தொற்றுநோய்களின் செயல் விளைவுடைய தடுப்புகளுக்கும் சிகிச்சைகளுக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.[1]”

 

“சிகிச்சைக்கு எதிர்த்துப் போராடும் நுண்ணுயிரினங்கள் மருந்துகள் செயல்படுவதைத் தடுக்கும் திறன் கொண்டவை.”

 

“சிகிச்சைக்கு அடிபணியாத நுண்கிருமிப்பிணிகள், மருந்துகள் செயல்படுவதைத் தடுக்கும் திறன் கொண்ட நுண்ணுயிரினங்களால் ஏற்படுகின்றன.”

 

“ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் 700,000க்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு அடிபணியாத நுண்கிருமிப்பிணிகளால் இறக்கின்றனர்.”

Learning point

கிருமிகள் எதிர்ப்பாற்றல் ஓர் அனைத்துலகச் சிக்கலா?

 

நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் பல உயிர்காக்கும் மருந்துகள் விரைவாக அதன் சக்தியை இழந்து வருகின்றன. கிருமிகள் விரைவாக அவற்றுக்கு எதிர்ப்பை உருவாக்குகின்றன.[1],[2] இதன் விளைவாக நீடித்த நோய், இயலாமை, உயிர் இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. கிருமிகளை எதிர்க்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லையானால், சாதாரணமான நோய்கள் கூட உயிருக்கு ஆபத்தானதாக மாறும்.  மனிதகுலம் முன் கொல்லிகள் இல்லாத யுகத்திற்கு திரும்ப முடியும்.

 

யாரும் நடவடிக்கை எடுக்காவிட்டால், மருத்துவ அறுவை சிகிச்சைகளும் பிரசவங்களும் ஆபத்துக்கு ஆளாகும் நிலையில் இருக்கின்றன. நோயாளிகளும் கைக்குழந்தைகளும் தாய்மார்களும் கிருமிப்பிணிகளின் காரணமாக இறந்துவிடுவார்கள். ஒரு சமயத்தில் சிகிச்சையளிக்கக்கூடிய பலவித கிருமிப்பிணிகள் எதிர்காலத்தில் மரணத்திற்குக் காரணமாக அமைந்துவிடும்.[1]

 

இயற்கையாகவே கிருமிகள் மருந்துகளை எதிர்த்துப் போராடுகின்றன. கிருமிகள் எளிதாக மாற்றமடைந்து உயிர்வாழ கற்றுக் கொள்கின்றன. மனிதர்கள் மருந்துகளைத் தவறாகவும் அல்லது அதிகமாகவும் பயன்படுத்தும்போது கிருமிகள் மிக வேகமாகத் தம்மை மாற்றிகொள்கின்றன. மருந்துகளை எதிர்க்கும் விஷக்கிருமிகள் பெருகிவிட்டால் கிருமிப்பிணிகளுக்குச் சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகிவிடும்.

 

மருந்துகளைக் குறிப்பாகக் கொல்லிகளை அதிகப்படியாகவும் தவறான முறையிலும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக, தீநுண்ம நோய்களுக்குக் கொல்லிகள் தேவை இல்லை. இருப்பினும், உலகளவில் பலர் சாதாரண தடிமன் அல்லது சளிக்காய்ச்சல் வரும்போது தேவையற்ற முறையில் கொல்லிகளைச் சாப்பிடுகிறார்கள். உலகளவில், கால்நடை வளர்ப்பில் நுண்ணுயிர்களுக்கான கொல்லிகளை அளவற்று பயன்படுத்துகின்றனர். நோயுற்ற விலங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்குப் பதிலாக ஆரோக்கியமான விலங்குகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க அல்லது நோயைத் தடுக்க பெரிய அளவில் கொல்லிகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

 

விஷக்கிருமிகள் எதிர்ப்பினால் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 700,000க்கும் மேலான மக்கள் கிருமிப்பிணிகளுக்குத் தங்கள் உயிரை இழக்கின்றனர். நாம் இந்தச் சிக்கலுக்கு ஒரு தீர்வு காணாவிட்டால், இறப்பு எண்ணிக்கை 2050க்குள் ஆண்டுக்கு 10,000,000மாக உயரக்கூடும். நுண்ணுயிரிகள் கொல்லிகளை எதிர்க்கும் சக்தியைக் குறைக்க வேண்டும். மென்மேலும் வளர விடக்கூடாது. ஆகையால், அதிகப்படியான மற்றும் தவறான பயன்பாட்டைக் குறைத்தல் வேண்டும். முக்கியமாக, கிருமிப்பிணி முதலில் வராமல் தடுப்பதே நல்லதாகும்.[3]

 

ஆதார நூற்பட்டியல்

[1]     உலக சுகாதார அமைப்பு (World Health Organization or WHO), 15 பிப்ரவரி 15, 2018. எதிர் நுண்ணுயிரினங்களின் எதிர்ப்பாற்றல். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

 https://www.who.int/en/news-room/factsheets/detail/antimicrobial-resistance

[2]     அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Center for Disease Prevention and Control, CDC), 1 செப்டம்பர் 2018. எதிர் நுண்ணுயிரினங்களின் எதிர்ப்பாற்றல் பற்றிய செய்தி. வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது:

https://www.cdc.gov/drugresistance/about.html

[3]  ஒ'நெயில், ஜே. (19 மார்ச்சு 2016). உலகளவில் மருந்து-எதிர்ப்பினால் சிகிச்சைக்கு அடங்காத தொற்றுநோய்களைக் கையாளுதல்: இறுதி அறிக்கை மற்றும் பரிந்துரைகள். கிருமிகள் எதிர்ப்பாற்றல் பற்றிய விமர்சனம். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

O'Neill, J. (19 மார்ச் 2016). Tackling Drug-Resistant Infections Globally: Final Report and Recommendations. The Review on Antimicrobial Resistance. https://amr-review.org/sites/default/files/160525_Final paper_with cover.pdf

Related words.
Word of the month
New word